சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல் புறநோயாளிகள் பிரிவு (Liver OPD) மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கல்லீரல் நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனில் வினாயக், கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ். நிரஞ்சனி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் பிஸ்வரூப் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிறந்த குழந்தைகளில் ஏற்படும் மரபணு கல்லீரல் கோளாறுகள் முதல், வயது வந்தோருக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வயதினருக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்கும் வகையில் இந்த புதிய OPD மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை, வளர்சிதை மாற்ற கொழுப்பு கல்லீரல் நோய் (MASLD), கல்லீரல் புற்றுநோய், ஹெபடோரினல் சிண்ட்ரோம், கல்லீரல்–சிறுநீரக இணை மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து மாநில அளவில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், ‘சிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக் குழு’ என்ற தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றுள்ள இந்த மருத்துவமனை, உலகளவில் பல அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாதனைகளையும் படைத்துள்ளது. புதிய Liver OPD மையம் மூலம் நோயாளிகளுக்கு ஆரம்ப கட்ட கண்டறிதல் முதல் மேம்பட்ட சிகிச்சை வரை ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கப்படவுள்ளது.

