தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற உடனேயே முக்கியமான மூன்று கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.


