Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“என் குடும்பம்” என ஆர்த்தி குடும்பத்துடன் புகைப்படம் பகிர்ந்த குஷ்பு… இணையத்தில் வைரல்!

Khushbu Shares Picture with Aarti and Children, Says “My Family”

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ரவி மோகன் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சென்னை நகரை விட்டு வெளியேற இருப்பதாகவும், தனது வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்ற இசையிலிருந்தும் விலகுவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு பிரபல நடிகை காரணம் என மறைமுகமாக குற்றம்சாட்டியதாக செய்திகள் பரவின.

இந்த சூழலில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில் ஆர்த்தி, அவரது குழந்தைகள், தனது மகள்கள் மற்றும் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பு, “என் குடும்பம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.