Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘கருப்பு’ படத்தின் ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு

‘Karuppu’ Movie ‘Raathu Raasan’ Song Released

இயக்குநர் R. J. Balaji இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து அப்டேட்களால் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படத்தில் Trisha நாயகியாக நடித்துள்ளதுடன், ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், Yogi Babu உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை Sai Abhyankkar மேற்கொண்டுள்ளார்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானது. அதனைத் தொடர்ந்து அக்டோபரில் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும், கடந்த மாதம் வெளியான ‘நாங்க நாலு பேரு’ என்ற இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ராத்து ராசன்’ இன்று புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடல் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது. ‘கருப்பு’ திரைப்படம் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.