Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

Kara – தனுஷ் படத்திற்கு தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

‘Kara’ Plea filed in High Court seeking a ban on Dhanush’s film!

நடிகர் Dhanush நடித்துள்ள ‘கர’ திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் Vignesh Raja இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். G. V. Prakash Kumar இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Ishari K. Ganesh தயாரித்துள்ளார்.

தணிக்கைக் குழுவில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள ‘கர’ திரைப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டிற்கு தடைவிதிக்கக் கோரி Madras High Court-இல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், ‘கர’ என்ற தலைப்பை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளதாகவும், அதே பெயரில் மற்றொரு படம் வெளியாகக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு காரணமாக, திட்டமிட்ட தேதியில் ‘கர’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.