Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

Kalidas 2 to Release Earlie

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.

2019ஆம் ஆண்டு, பரத் நடித்த ‘காளிதாஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த அந்த படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கினார். இதில் அதில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது, ‘காளிதாஸ் 2’ திரைப்படம் உருவாகி தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், ‘பூவே உனக்காக’ புகழ் சங்கீதா 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘காளிதாஸ் 2’ படம் முன்கூட்டியே ஏப்ரல் 3ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும்.

இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.