Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள போகும் இரண்டு பிரபலங்கள், வைரலாகும் புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பாட்டியின் எண்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

எல்லோரும் பாட்டிக்கு பிடித்தமான கிப் கொடுத்து அவரின் ஸ்பெஷல் கிப்ட் வாங்குவதற்காக போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் முத்து பாட்டியின் தோழிகளை அழைத்து வந்து சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளார்.

பாட்டியின் தோழிகளாக கே ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடிக்க உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

K R Vijaya and Vadivukarasi Entry in Sirakadikka Aasai Serial
K R Vijaya and Vadivukarasi Entry in Sirakadikka Aasai Serial