Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஜன நாயகன் vs பராசக்தி” ஜன நாயகன் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி லாபம் தரும் : கோலிவுட் கணிப்பு..!

"Jananayagan vs Parasakthi" Janananayagan will make a profit of 500 crores within a few days of its release: Kollywood prediction..!

“ஜன நாயகன் vs பராசக்தி” ஜன நாயகன் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி லாபம் தரும் : கோலிவுட் கணிப்பு..!

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பெருந்தொகைகளை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். அந்த தொகைக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்க ‘ஜனநாயகன்’ படம் குறைந்தது ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும் என கணிக்கப்படுகிறது.

ரூ.500 கோடி வசூல் செய்தால் தான் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இச்சூழலில், கண்டிப்பாக ‘ஜனநாயகன்’ படம் 500 கோடியை சுலபமாக வசூலிக்கும் என உறுதியாக சொல்லப்படுகின்றது. அதுவும் படம் வெளியான சில நாட்களிலேயே இப்படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படமும் வெளியானாலும் ‘ஜனநாயகன்’ வசூலுக்கு பாதிப்பு வராது என்றே தெரிகின்றது.

இப்படம், விஜய்யின் கடைசிப் படம் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை திரையில் பார்க்க விரும்புவார்கள். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இப்படம் தமிழில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவிக்கும் படமாக இருக்கும் என கணிக்கப்படுகின்றது.

இப்படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெறுகின்றது. ஆனால், கதைக்கரு மட்டும் ஒன்றாக இருக்குமே தவிர, மற்றபடி பகவந்த் கேசரி படத்திற்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது என்றே ரசிகர்களாலும் கோலிவுட் வட்டாரத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது.

"Jananayagan vs Parasakthi" Janananayagan will make a profit of 500 crores within a few days of its release: Kollywood prediction..!