திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார் பந்தயங்கள் மற்றும் சாகசங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
உலகின் மிகவும் கடினமான மற்றும் சவாலான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் 24H Series GT3 Pro-Am கார் பந்தயத்தில், அஜித் குமாரின் ரேசிங் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. Circuit de Spa-Francorchamps என்ற புகழ்பெற்ற பந்தய தளத்தில் நடைபெற்ற இந்த 24 மணி நேர தொடர்ப்போட்டியில், கடும் போட்டியை சமாளித்து இந்த வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.
வெற்றிக்குப் பின், இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி கோப்பையை உயர்த்திக் காட்டிய அஜித் குமார், இந்திய ரசிகர்களின் மனதில் பெருமையை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அஜித் குமார் ரேசிங் அணி வெளியிட்ட பதிவில், “கோடிக்கணக்கான கனவுகளை சுமந்து சென்ற இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த சாதனை, ஆர்வம், மன உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றுக்கு எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கிறது. இந்தியாவுக்கே இது பெருமை சேர்த்த தருணம்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வெற்றியால், சர்வதேச ரேசிங் அரங்கில் இந்தியாவின் பெயர் மேலும் உயர்ந்துள்ளது.
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits.… pic.twitter.com/UFcl4XY6Dz— Ajithkumar Racing (@Akracingoffl) April 19, 2026

