Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா

Hansika Motwani travels to Mauritius

கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகர், நடிகைகள் பலர் கடற்கரை மற்றும் சொகுசு ரிசார்ட்களில் விடுமுறையை அனுபவிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது மொரீசியஸ் தீவிற்கு தனது தோழியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் தோழியுடன் ஜாலியாக விடுமுறையை கொண்டாடியுள்ளார்.

சமீபத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்துக்குப் பிறகு, இந்த இனிய சுற்றுலா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடற்கரையில் தோழியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் மட்டுமல்லாமல், சிங்கத்துடன் போஸ் கொடுத்துள்ள காட்சிகளையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.