சென்னையில் தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்குகள் தளத்துடன் இயங்கிவரும் கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ். தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த கடையில் புதிய கிளை தான் வேலவன் ஸ்டோர்.
ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் எங்கும் கிடைக்காத குறைந்த விலை நிறைந்த தரம் என அனைத்திலும் அடித்துக் கொள்ள முடியாத அளவிற்கு வேலவன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளது.
சாதாரண மக்கள் போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த கடையில் தொடர்ந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் குக் வித் கோமாளி புகழ், பாலா, வினோத், தீபா அக்கா பலரும் ஷாப்பிங் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல சின்னத்திரை சீரியல் பிரபலங்களும் ஷாப்பிங் செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது டிக் டாக் மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நடிகராக நடித்து வரும் ஜி பி முத்து ஷாப்பிங் செய்துள்ளார். இவர் ஷாப்பிங் செய்த கலகலப்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.

