Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை திட்டிய ஈஸ்வரி.. ஆறுதல் கூறும் எழில்… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஜெனியின் வீட்டுக்கு வந்திருப்பதால் செழியன் போதுமா உங்களுக்கு இப்போ சந்தோஷமா? சொந்தக்காரங்களுக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச ஒவ்வொருத்தரா கண்டிப்பா வருவாங்க. ஜெனியோட அம்மாவுக்கு நாங்களா சொன்னோம் அவங்க போன் பண்ணி உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சானு கேட்டா எப்படி இருக்கும்? என சொல்ல ஈஸ்வரி உன்னுடைய வீம்பு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு. இன்னும் என்னதான் நடக்க போகுது எனக்கு ஒன்னும் புரியல என பாக்யாவை கரித்துக் கொண்டு உள்ளே செல்கிறார்.

பிறகு செழியன் மேலே ரூமுக்கு போக அப்போது ஜெனியின் அம்மா நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்ல வந்து இருக்கலாம்ல. மேலே இருக்க வீடு காலியா தானே இருக்கு நீங்க அங்கேயே இருக்கலாம் என சொல்ல செடியின் யோசிக்க ஜெனி தயவு செய்து இந்த யோசனையை இதோட விட்டுடுங்க. நான் இந்த வீட்டோட மூத்த மருமகள், எனக்கு சில பொறுப்பு இருக்கு. நான் இந்த வீட்டை விட்டு எங்கேயும் வரமாட்டேன் செழியன் வரமாட்டான் என ஜெனி கூறுகிறார்.

அடுத்ததாக மறுநாள் பாக்கியா கிச்சனில் செல்வியிடம் நாளையிலிருந்து ஆபீஸ் போய் மீண்டும் வேலைகளை தொடங்க வேண்டும். பழைய கஸ்தூரி எல்லோரிடமும் பேச வேண்டும் புதிய கஷ்டமரை பிடிக்க வேண்டும். குடும்பத்த கவனிக்கும் பொறுப்பு என்கிட்ட இருக்கு என சொல்ல செல்வி அது மட்டுமா இருக்கு அவருக்கு 40 லட்சம் தரணுமே எந்த தைரியத்துல சவால் விட்ட என கேட்க எப்ப பாத்தாலும் பணம் பணம்னு பேசினா வேற என்ன பண்றது அதனால தான் அப்படி சொன்னேன். அதுல எனக்கு எந்த வருத்தமும் பயமும் இல்லை என்னால முடியும் என்ற நம்பிக்கை வைராக்கியமா என் மனசுக்குள்ள இருக்கு என கூறுகிறார்.

பிறகு இனியா உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது கார் சத்தம் கேட்டு கோபி வந்து விட்டதாக நினைத்து வெளியே ஓடிச்சென்று பார்த்து ஏமாற்றம் அடைந்து உள்ளே வந்து எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம் என அழுது கொண்டே உள்ளே சென்று விடுகிறார். ஈஸ்வரி திரும்பவும் பாக்கியாவை திட்டி விட்டு உள்ளே செல்ல எழில் பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update