தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தையும் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது பற்றியும் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கோக்கன் வில்லனாக நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
ஜான் கோக்கன் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வீரம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


