Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் ரவி மோகனுடன் கூட்டணி: நெகிழ்ந்த இயக்குநர் கணேஷ் கே பாபு!

Joining Hands with Actor Ravi Mohan Director Ganesh K Babu Gets Emotional!

‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’. இதில் நடிகர் ரவி மோகன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றும் தனது நீண்ட நாள் கனவு நனவானது குறித்து இயக்குநர் கணேஷ் கே பாபு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “சில கனவுகள் நனவாக பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இன்று எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ரவி மோகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட காலமாக தனது விருப்பமாக இருந்ததாகவும், அவருடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘கராத்தே பாபு’, அரசியல் மற்றும் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் எமோஷனல் த்ரில்லர் படமாகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் நட்பை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தௌதி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாசர், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசுதேவன், வி.டி.வி.கணேஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைக்க, எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.