Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

SK-வின் மிரட்டல் லுக் வைரல்: ரசிகர்களை கவரும் ‘சேயோன்’ அப்டேட்!

SK's Fierce New Look Goes Viral

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் அவரது புதிய திரைப்படமான ‘சேயோன்’ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள நிலையில், முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில், சாமி ஆடும் வித்தியாசமான தோற்றத்தில் சிவகார்த்திகேயன் காட்சியளித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. குறிப்பாக, “அவன் சாமி கும்பிடுறவன் இல்ல… சாமி வரவழைக்கிறவன்!” என்ற வசனத்துடன் ‘லார்ட் விருமாண்டி’ கதாபாத்திரத்தில் அவர் கொடுத்த மாஸ் என்ட்ரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதுவரை காணாத புதிய ஆக்‌ஷன் அவதாரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படம், கிராமத்து ஆன்மீக பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. ஒளிப்பதிவை விவேக் விஜயகுமார் மேற்கொள்ள, படத்தொகுப்பை சான் லோகேஷ் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘சேயோன்’ படத்தின் புதிய கிளிக்கை பகிர்ந்துள்ளார். அவரது மிரட்டலான புதிய லுக் இணையத்தில் வேகமாக வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசுர வேகத்தில் தயாராகி வரும் ‘சேயோன்’, 2026 அக்டோபரில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் ஆன்மீக அம்சங்கள் கலந்த இந்த படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.