‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான நடிகர்பிரபாஸ், தற்போது ‘கல்கி 2898 ஏ.டி. ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அவர், ஏற்கனவே ஐதராபாத் அருகிலுள்ள ராயதுர்கத்தில் ஆடம்பர விருந்தினர் இல்லம் ஒன்றை வைத்துள்ளார். அங்கு பிரபலங்களின் சந்திப்புகள் மற்றும் தனிப்பட்ட கொண்டாட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராயதுர்கம் பகுதி தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகரித்து பரபரப்பான இடமாக மாறியுள்ளதால், Prabhas புறநகர் பகுதியில் புதிய கனவு மாளிகை ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வரும் இந்த ஆடம்பர இல்லத்தின் கட்டுமான செலவு ரூ.160 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. பிரமாண்டமான அறைகள், தனியார் தியேட்டர், நீச்சல் குளம், அழகிய தோட்டங்கள், சிறப்பு வசதிகளுடன் கூடிய குடியிருப்பு பகுதி, நவீன உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த மாளிகை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த கனவு மாளிகையின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் சுமார் 2 ஆண்டுகள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

