விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. செல்ல அய்யாவு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.
‘கட்டா குஸ்தி 2’ படத்திலும் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய செல்ல அய்யாவுவே இந்த தொடர்ச்சிப் படத்தையும் இயக்கியுள்ளார்.
மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
அத்துடன், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வரும் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


