Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் சிலந்தி 2!

Silandhi 2 Set for a Grand Release in 6 Languages

சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

2008ஆம் ஆண்டு வெளியான சிலந்தி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘சிலந்தி-2’ திரைப்படத்தை ஆதிராஜன் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி என ஆறு மொழிகளில் மிரட்டல் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.

படத்தின் படப்பிடிப்பு கம்போடியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், Kantara மற்றும் ‘லோகா’ போன்ற படங்களில் இடம்பெற்ற பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளைப் போல, ‘சிலந்தி-2’ திரைப்படத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

முதல் பாகமான ‘சிலந்தி’ திரைப்படத்தில் நடிகர்கள் முன்னா, மாளவிகா மற்றும் ரியாஸ் கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் நீல் முகர்ஜி இசையமைத்திருந்தார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் மாளவிகா மேனன், இவன் வேற மாதிரி, விழா, பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா மற்றும் பேய் மாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக, 2022ஆம் ஆண்டு ஆதிராஜன் இயக்கிய அருவா சண்டை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மேனன். அந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதேபோல் ‘சிலந்தி-2’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.