நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட இந்த படம், வரும் மே 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது டிரெய்லர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘கருப்பு’ திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் தள பதிவில், “டிரெய்லர் தெறிக்கும்… தி ஒன் வந்து கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
Trailer Theriikum 💥💥💥 #karuppu
The One is cominnnnnn 👑— abhyankkar (@SaiAbhyankkar) May 7, 2026

