பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சிங் இஸ் கிங்’ படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மியுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வித்யா பாலன் மற்றும் ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளாவில் இருந்து திரும்பியுள்ள அக்ஷய் குமார், விரைவில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சைக்குப் பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

