Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!

Lokesh Kanagaraj's 'DC' Glimpse Video Released!

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனக​ராஜ் நடிக​ராக அறி​முக​மாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன் இயக்குகிறார். இந்த மிரட்​டலான ஆக்‌ஷன் படத்தை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. அனிருத் இசை அமைக்​கிறார்.

இப்படத்தில் தேவ​தாஸ் என்ற கதா​பாத்​திரத்​தில் லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கிறார். வாமிகா கபி சந்​தி​ரா​வாக​வும், சஞ்​ச​னா, பார்​வ​தி​யாக​வும் நடிக்​கின்​றனர். காதலர் தினத்​தையொட்டி இப்​படத்​தில் இருந்து கிளிம்ஸ் வீடியோவை படக்​குழு வெளி​யிட்டுள்​ளது. கோடைக்​காலத்​தில் இந்​தத் திரைப்​படம் வெளி​யாகும் என அறிவிக்கப்பட்டு உள்​ளது. இந்த வீடியோ இணையத்​தில் வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj's 'DC' Glimpse Video Released!
Lokesh Kanagaraj’s ‘DC’ Glimpse Video Released!