Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

actor sivakumar and radhika revealed suriya love story

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ராதிகா மற்றும் சிவகுமார் இருவரும் கலந்து கொண்டுள்ளனர் அப்போது பேசிய போது ராதிகா உயிரிலே கலந்தது படத்தின் போது சூர்யா அதிகமாக வெட்கப்படுவார் என்றும் யாரிடமும் பேச மாட்டார் என்றும் கூறியுள்ளார். அப்போதுதான் நான் போய் ஹீரோயின் ஜோதிகா கிட்ட பேசு எல்லார்கிட்டயும் சகஜமா பழகு என்று சொல்லுவேன் என சொன்னார்.

இதைக் கேட்டு பக்கத்தில் இருந்த சிவக்குமார் சூர்யா அமைதியா தான் இருந்தான் அவங்கள சேர்த்து வைத்த அயோக்கிய பெண் இவங்கதான் அவன் பாட்டுக்கு அமைதியா இருந்திருப்பான் பேசு பேசுன்னு சொல்லிட்டு இப்ப பாருங்க என்று சொல்ல அங்கு இருப்பவர்கள் சிரித்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் ராதிகா சித்தி சீரியல் செய்யும்போது சூர்யாவும் ஜோதிகாவும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும் ஆனால் சிவக்குமார் சம்மதிக்காததால் பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் வேறு வழி இல்லாமல் சம்மதித்ததாகவும் சொல்லியிருக்கிறார். மேலும் சூர்யா நான்கு வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

சூர்யாவின் காதல் கதையைப் பற்றி இவர்கள் பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

actor sivakumar and radhika revealed suriya love story