Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அசோகன் சொன்ன வார்த்தை, கடுப்பில் மாதவி, வெளியான மூன்று முடிச்சு எபிசோட்.!!

moondru mudichu serial episode update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினியை அடுத்த மாதவி கையை ஓங்க தடுத்து நிறுத்திய நந்தினி எல்லா தப்பையும் நீயும் உன் புருஷனும் பண்ணிட்டு என் மேலயும் எங்க அப்பா மேலயும் பழி போடறியா என சொல்லி கன்னத்தில் ஓங்கி அரைகிறார். நானும் உண்மையை சொல்ல வேண்டான்னு அமைதியாக இருந்த, கூட பொறந்த தம்பிக்கு இப்படி செய்ய எப்படிடி உனக்கு மனசு வருது என்று சொல்லிவிட்டு, சூர்யா சாருக்கு ஏதாவது ஆச்சின்னா உன்னை சும்மா விடமாட்டேன் என்று மிரட்ட உடனே சுந்தரவல்லி நந்தினியை அறைந்து என் முன்னாடியே என் பொண்ண அடிப்பியா கேள்வி கேட்கிறார். உடனே சுந்தரவல்லி உன்ன நான் என்ன பண்ணப் போறேன்னு மட்டும் பாரு என்று சொல்லி சவால் விட அருணாச்சலம் நந்தினியை அழைத்து வந்து விடுகிறார் உடனே நந்தினி அருணாச்சலம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். சொந்த தம்பி உயிருக்கு ஆபத்து வந்தா கூட பரவாயில்லைன்னு இப்படி பண்றாங்களே என்று சொல்ல, சூர்யாவுக்கு ஆபத்து வெளியில கிடையாது வீட்டுக்குள்ளவே தான் இது உனக்கு வேணும்னா அதிர்ச்சியா இருக்கலாம் எனக்கு கிடையாது என்று சொல்லுகிறார்.

நான் சூர்யாவை பக்கத்திலிருந்து பாத்துக்குறேன் நீ வீட்டுக்கு போமா என்று சொல்ல,நான் எப்படி ஐயா போக முடியும் சூர்யா சார் இந்த நிலைமையில விட்டுட்டு நான் வீட்டில் போய் என்ன பண்ண போற என்று சொல்ல அருணாச்சலம் கட்டாயப்படுத்தி நந்தினி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வரும் வழியில் நந்தினி கோவிலை பார்க்க உடனே வந்து சூர்யா சாருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது எதுவா இருந்தாலும் எனக்கு ஒரு அவரை ரொம்ப நல்ல மனுஷன் இவ்வளவு நாளா அந்த வீட்டை விட்டு போகணும்னு நினைச்சேன் ஆனா இப்பதான் எனக்கு அவர் கூட வாழனும்னு ஆசை வந்திருக்கு இதுல இருந்து எங்களை வெளியே கொண்டு வந்து அவருக்கு எந்த ஆபத்தையும் கொடுக்காமல் வெச்சிக்கிட்டு இரு என்று வேண்டிக் கொள்கிறார். நந்தினி வீட்டுக்கு வர கல்யாணம் நலம் விசாரிக்கிறார். பிறகு கல்யாணம் சிங்காரம் குடும்பத்தினரை அசிங்கப்படுத்தி அனுப்பிய விஷயத்தை சொல்ல நந்தினி கண் கலங்கி அழுகிறார்.

உங்க வீட்டு ஆளுங்கள இதுக்கப்புறம் நீ எதுக்காகவும் இங்க வர சொல்லாத நீ வேணும்னா போய் பாத்துட்டு வா என்று சொல்லி விட்டு, இன்னொன்னு சொல்லட்டுமா என்று சொல்லி இந்த வீட்ல இருக்கிறவங்க உன்ன பாம்பு மாதிரி கொத்திகிட்டு இருக்காங்க நீ எப்பவுமே ஒன்னு சொல்லுவ இல்ல இந்த வீட்டை விட்டு போகணும்னு ஆனா அண்ணன் இப்ப சொல்றேன் நீ இந்த வீட்டை விட்டு போயிடுமா நீயே கஷ்டப்படணும் என்று கேட்க நந்தினி நான் எங்கேயும் போக மாட்டேன் என சூர்யா சாருக்காக நான் இங்க தான் இருப்பேன் என்று முடிவெடுக்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி அவ எப்போ உன்னை என்னுடைய எதிர்ல கைநீட்டி அடிச்சாலும் அவளை சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க மேனேஜர் ஃபோன் போட்டு டெல்லி போக போகும் விஷயத்தை சொல்ல சூர்யாவுக்கு அடிபட்டு இருக்கும் விஷயத்தை சொல்லுகிறார் அப்ப கேன்சல் பண்ணலாமா என்று கேட்க கேன்சல் பண்ண வேணாம் யாரு அனுப்புறதுன்னு சொல்ற என்று சொல்லி போனை வைக்கிறார்.

மறுபக்கம் விஜி நந்தினிக்கு போன் போட அக்கா சூர்யா சாருக்கு என்று ஆரம்பிக்க எனக்கு எல்லா விஷயமும் தெரியுமா என்று சொல்ல நந்தினி வருத்தப்பட்டு பேசுகிறார் சரி நான் அங்க வரேன் என்று சொல்ல நான் ஹாஸ்பிடலில் இல்ல அக்கா வீட்ல தான் இருக்கேன் என்று சொல்ல விஜி அதிர்ச்சி அடைகிறார் நீ எதுக்கு வீட்டுக்கு வந்த என்று சொல்ல அருணாச்சலம் அய்யா தான் இங்க இருந்தா பிரச்சனை பெருசாக்கிட்டு இருக்கும் என்று சொல்லாதாக சொல்லுகிறார் பிறகு நந்தினி நடந்த விஷயங்கள் அனைத்தையும் விஜியிடம் சொல்லுகிறார். இவங்களால் ஏன் இவ்வளவு அசிங்கமா இருக்காங்க இதுல என்ன உண்மைன்னா அந்த பட்டாசை பத்த வச்சது அவங்க அக்கா மாதவி தான் ஆனால் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம என் மேலேயும் என்னோட அப்பா மேல இன்னும் பழி போட்டாங்க அதனால தான் கோவத்தில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் நான் மாதவியை அடிச்சிட்டேன் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாக சரி நீ எதை பத்தியும் கவலைப்படாத நாங்க ஹாஸ்பிடல்ல போய் விவரம் தெரிஞ்சுக்கிட்டு போன் பண்றோம் என சொல்லி கிளம்புகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update
moondru mudichu serial episode update