Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மோட்டிவேஷனல் பதிவை வெளியிட்ட செல்வராகவன். வைரலாகும் பதிவு

selva-raghavan-motivational-post

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பாகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் செல்வதாகவன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அனுபவத்தில் கற்றுக்கொண்ட சில விஷயங்களை மோட்டிவேஷனலாக எடுத்துரைத்து ட்விட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது, “இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம், கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை” என்று வாழ்க்கை குறித்து மோட்டிவேஷனலாக எடுத்துரைத்து ட்விட் செய்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.