Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருது நிகழ்ச்சியில் மனைவிக்கு அன்பு கட்டளை விடுத்த ஏ ஆர் ரகுமான்.

arrahman-tell-wife-not-to-speak-in-hindi

விருது நிகழ்ச்சியில் தமிழில் பேசுமாறு மனைவியிடம் அன்பாக எடுத்துரைத்த ஏ ஆர் ரகுமான்.உலக அளவில் அனைவருக்கும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக பரிச்சயமானவர் ஏ ஆர் ரகுமான். ரசிகர்கள் மத்தியில் ஆஸ்கார் நாயகனாக வலம் வரும் இவரது இசையில் நாளை வெளியாக இருக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஏ.ஆர்.ரகுமனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த ரகுமான் திடீரென்று அவரது மனைவியை பேசும்படி மேடைக்கு அழைத்தார். அப்போது மனைவியிடம், இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் என்று அன்பாக கட்டளையிட்டுள்ளார். அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

arrahman-tell-wife-not-to-speak-in-hindi

arrahman-tell-wife-not-to-speak-in-hindi