Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைரலாகும் அரபிக் குத்துப் பாடலின் மேக்கிங் வீடியோ

arabic kuthu song making video viral update

தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள இப்படம் குறித்த தகவல்களுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பீஸ்ட் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் சில முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து இருந்தனர். ஒரே செட்டில் வைத்து ஆக்சன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தில் அனிருத் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது.

அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த பாடல் தற்போது youtube இல் 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதுவும் தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.