Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் ’டிரெயின்’ ரிலீஸ் எப்போது? – வெளியான முக்கிய தகவல்

When will Vijay Sethupathi's 'Train' release? - Important information released

விஜய் சேதுபதியின் ’டிரெயின்’ ரிலீஸ் எப்போது? – வெளியான முக்கிய தகவல்

பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது ‘ட்ரெய்ன்’ படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ என்ற பாடல் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் மூலமாக ‘ட்ரெய்ன்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகள் உறுதியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் முக்கியமான ரோலில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கலையரசன், பப்லு மற்றும் டிம்பிள் ஹாதி, ஷாஜி சென் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதைக்களம் குறித்து மிஷ்கின் தெரிவிக்கையில், ‘வாழ்க்கையை வெறுத்து சாகலாம் என்ற முடிவுடன் ஒருவன் ரயிலில் பயணிக்கிறான். அப்போது, அவன் சந்திக்கும் மனிதர்களையும் நடக்கும் சம்பவங்களையும் வைத்து இப்படத்தை இயக்கியுள்ளதாக கூறினார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அறிவிப்பு தற்போது அனைவரையும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

இதற்கிடையில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. விரைவில் ரிலீஸ் சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் சிம்புவின் ‘அரசன்’ படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பதற்கும் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.

When will Vijay Sethupathi's 'Train' release? - Important information released
When will Vijay Sethupathi’s ‘Train’ release? – Important information released