Viswanath and Sons Crosses 200 Crore Worldwide
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படமும் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்து வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படமும் வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘கருப்பு’ திரைப்படத்தின் 100 நாள் வெற்றியைப் பாராட்டிய சூர்யா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
200 CRORES+ Worldwide Gross ❤️❤️
And still counting 🫶🏻🫶🏻#VishwanathAndSons continues its phenomenal run with families coming together and celebrating every emotion on the BIG SCREENS ❤️🔥#BlockbusterVAS#BlockbusterVishwanathAndSons@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju… pic.twitter.com/hYciSSKTND— Sithara Entertainments (@SitharaEnts) August 23, 2026
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…