Categories: Movie Reviews

பத்தா திரை விமர்சனம்

ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி லிஜோமோல் ஜோஸ் மற்றும் மகள் சகஸ்ராவிடமும் அடிக்கடி கோபமாக நடந்து கொள்கிறார்.

அதே ஊரில் சுட்டித்தனம் செய்யும் சிறுவன் சாய் பிரித்விராஜ், எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதியை மூடப்பட்ட பள்ளியின் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுகிறார். தான் பூட்டி வைத்திருப்பது ஊரே பயப்படும் ரவுடி என்பது தெரியவர, சிறுவன் பயத்தில் உறைகிறான்.

ஒருவருக்கொருவர் முற்றிலும் அறிமுகமில்லாத நிலையில், கழிவறைக்குள் தொடங்கும் இந்தச் சம்பவம் இருவருக்கும் இடையே எதிர்பாராத உறவை உருவாக்குகிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து அவர் தப்பித்தாரா? மூடப்பட்ட பள்ளிக்கு இருவரும் சென்றதன் பின்னணி என்ன? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பக்தவத்சலம் என்ற ‘பத்தா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் முரட்டுத்தனமான ரவுடியாக வலம் வரும் அவர், ஒரு கட்டத்தில் மனம் மாறும் தருணங்களில் ரசிக்க வைக்கிறார். கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி, தனது நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்துள்ளார்.

லிஜோமோல் ஜோஸ், குடும்பப் பெண்ணாக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்துக்குப் பிறகு மீண்டும் கவனம் ஈர்க்கும் வகையில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு சிம்ம சொப்பனமாக வரும் சிறுவன் சாய் பிரித்விராஜின் சுட்டித்தனமான நடிப்பு படத்தின் கலகலப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. விஜய் சேதுபதியின் மகளாக வரும் சகஸ்ராவின் எதார்த்தமான நடிப்பும் மனதில் பதிகிறது. அஜய் கோஷ், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

எஸ்.கே. செல்வகுமாரின் ஒளிப்பதிவு, கதைக்களம் நடைபெறும் காலகட்டத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. சாய் அபயங்கரின் இசை படத்தின் காட்சிகளுடன் இயல்பாக ஒன்றிணைகிறது.

எதார்த்தமான காட்சிகளும், ரவுடி மற்றும் சிறுவனுக்கு இடையே உருவாகும் உறவும் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன. அதேநேரம், சில இடங்களில் காட்சிகள் நாடகத்தனமாக நகர்வது சற்று உறுத்துகிறது. மேலும் சில புதுமையான காட்சிகளைச் சேர்த்திருந்தால் திரைக்கதை இன்னும் வலுவாக அமைந்திருக்கும்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன், ஒரு ரவுடிக்கும் சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத உறவை மையமாக வைத்து, கலகலப்பு குறையாத காட்சிகளுடன் கதையை நகர்த்தி, இறுதியில் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க வைக்கிறார். இயக்குநர் அட்லி இப்படத்தை தயாரித்துள்ளார்.

மொத்தத்தில், முரட்டுத்தனமான ஒரு ரவுடிக்கும் சுட்டித்தனமான சிறுவனுக்கும் இடையே உருவாகும் பாசப் பிணைப்பை அழகாக பதிவு செய்திருக்கும் படமே ‘பத்தா’.

Suresh

Recent Posts

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

3 minutes ago

ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…

1 hour ago

சிக்மா திரை விமர்சனம்

ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…

1 hour ago

அன்பில் அவன் திரை விமர்சனம்

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…

1 hour ago

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரை விமர்சனம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…

1 hour ago

நாம் வாழும் உலகில்… சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி பதிவு!

நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு…

2 hours ago