90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதையடுத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ரவி தேஜா, தமிழ் மொழிக்கும் தனக்கும் இடையேயான நெருக்கமான உறவு குறித்து உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். தமிழ் மொழியின் மீது தனக்கு எப்போதும் தனி ஈர்ப்பு இருப்பதாகவும், அதன் பேச்சுவழக்கில் வெளிப்படும் நகைச்சுவை மற்றும் இயல்பான அழகு தன்னை மிகவும் கவர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், 1990-களின் நடுப்பகுதியில் தனது திரையுலக வாழ்க்கைக்கான ஆரம்பகட்ட போராட்டங்கள் அனைத்தும் சென்னையில்தான் தொடங்கியதாக அவர் நினைவுகூர்ந்தார். தனது சினிமா பயணத்திற்கு சென்னை ஒரு முக்கியமான அடித்தளமாக அமைந்ததாகவும், இந்த நகரம் மற்றும் இங்குள்ள மனிதர்களுடன் தனக்கு மறக்க முடியாத பல நினைவுகள் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் குறித்து பேசிய ரவி தேஜா, “இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் உண்மையான ஆன்மா” என்று புகழாரம் சூட்டினார். பின்னணி இசை இல்லாமலேயே படத்தைப் பார்த்தபோதும் தனக்குள் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை நிச்சயம் தொடும் ஓர் உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

Suresh

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

3 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

3 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

3 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

3 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

3 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

4 hours ago