Sibiraj Launches New Production House
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான ‘டென் ஹவர்ஸ்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகராக மட்டுமின்றி தற்போது தயாரிப்பாளராகவும் சிபிராஜ் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன்படி, ‘அண்டர்டாக் பிலிம்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் சிபிராஜே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ‘ஜீப்ரா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்.
இதுகுறித்து சிபிராஜ் கூறுகையில், “சினிமாவை நம்பி புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன். எனது இந்தப் புதுமுயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சிபிராஜ் – ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…