Bala to Direct Vijay Sethupathi
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதுதவிர, தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஜீவா சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் அல்லது இளையராஜா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய பாலா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படம் வெளியான நிலையில், தற்போது பாலா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகவுள்ளதாக கூறப்படும் புதிய திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…