ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் தணிக்கை பணிகள் நிறைவடைந்துள்ளன.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான தகவலின்படி, ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ‘UA 16+’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் 18 வினாடிகள், அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் 18 வினாடிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த பலரும் மீண்டும் இணைந்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, விநாயகம் மற்றும் ஜாஃபர் சாதிக் உள்ளிட்டோர் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், முதல் பாகத்தைப் போலவே மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றுவது டிரெய்லர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, அபிக்ஷா போர்வால் உள்ளிட்ட பலர் புதிதாக இணைந்துள்ளனர்.

வழக்கமான திரையரங்குகளில் மட்டுமின்றி IMAX திரைகளிலும் ‘ஜெயிலர் 2’ வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய அளவில் IMAX வெளியீடு காணும் படமாக இது அமைய உள்ளது.

முதல் பாகத்தில் பணியாற்றிய அனிருத் இசையமைப்பாளராகவும், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், ஆர். நிர்மல் படத்தொகுப்பாளராகவும் தொடர்கின்றனர். டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கத்தையும், பல்லவி சிங் மற்றும் முத்துல் ஹஃபீஸ் ஆடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். இப்படத்தில் சண்டைப் பயிற்சி இயக்குநராக சேத்தன் டி’சோசா புதிதாக இணைந்துள்ளார்.

இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களும் கவனம் பெற்றுள்ளன. கமல்ஹாசன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 1981-ஆம் ஆண்டு வெளியான ‘தில்லு முல்லு’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையும் படமாக இது அமையவுள்ளது.

அதேபோல், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள மற்றொரு படமும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suresh

Recent Posts

Jedusi Official Teaser

Jedusi Official Teaser | Sridhar, Swetha | Nataraj Ekambaram | Vigneshwaran | MRT Music

15 hours ago

அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதி நடத்திய பிரம்மாண்ட தீபாவளி விருந்து!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,…

20 hours ago

ரூ.200 கோடி பணமோசடி வழக்கு… அரசுத் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகும் நடிகை நோரா பதேஹி!

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில், பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான…

20 hours ago

சீன் படத்திற்காக ஓம் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்த தனுஷ்… மேடையில் நன்றி தெரிவித்த சூர்யா!

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான…

20 hours ago

குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்காதீர்கள்! பெற்றோருக்கு மம்மூட்டி எச்சரிக்கை

கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய…

21 hours ago

என் வாழ்க்கையில் இந்த நிலைக்கு வரக் காரணம் ஜோதிகாதான் – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு…

21 hours ago