ரூ.200 கோடி பணமோசடி வழக்கு… அரசுத் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகும் நடிகை நோரா பதேஹி!

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில், பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான நோரா பதேஹி அரசுத் தரப்பு சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வரும் நவம்பர் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகையில் நோரா பதேஹியின் பெயர் அரசுத் தரப்பு சாட்சியாக இடம்பெற்றுள்ளது.

பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்பில் இருந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, 2020-21 காலகட்டத்தில் டெல்லி சிறையில் இருந்தபடியே, மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸியின் முன்னாள் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கைத் தொடர்புகொண்டு, அவரது கணவரைச் சிறையிலிருந்து விடுவிப்பதாகக் கூறி சுமார் ரூ.200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நடத்தி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, நோரா பதேஹியிடமும் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தினர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164-ன் கீழ் அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

அப்போது, சுகேஷ் சந்திரசேகருடன் தனக்கு நேரடிப் பழக்கம் இல்லை என்றும், அவரது மனைவி லீனா மரியா பால் மூலமாகவே அவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் நோரா பதேஹி தெரிவித்திருந்தார். மேலும், 2020 டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தொழில்முறை அடிப்படையில் மட்டுமே கலந்துகொண்டதாகவும் விளக்கமளித்திருந்தார்.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நோரா பதேஹி நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய…

15 minutes ago

‘துரந்தர் 2’ படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்கார் செல்லும் இளையராஜா இசையமைத்த படம்!

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரைக்கான படமாக, இளையராஜா இசையமைத்த மராத்தி திரைப்படமான 'கோந்தல்' (Gondhal) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து…

55 minutes ago

Hello Kadhal Trailer

Hello Kadhal Trailer | Arya | Nikhila Vimal | Vaishnavi Chaitanya | Nikhil Muraly |…

18 hours ago

Aathi Ennale Mudiyalaye Lyrical Video

Aathi Ennale Mudiyalaye Lyrical Video | Irandu Vaanam | Vishnu Vishal | Mamitha Baiju |…

18 hours ago

NELLAI BOYS Official Teaser

NELLAI BOYS Official Teaser | Arivazhagan , Hema Rajkumar, Velaramamoorthy | Kamalkumar G

19 hours ago

காரில் சென்றபோதே மேக்கப் போட்டுக்கொள்வேன் – நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓபன்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் எதிர்கொண்ட…

19 hours ago