‘துரந்தர் 2’ படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்கார் செல்லும் இளையராஜா இசையமைத்த படம்!

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரைக்கான படமாக, இளையராஜா இசையமைத்த மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ (Gondhal) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்படும் படத்தைத் தேர்வு செய்வதற்கான பட்டியலில் மொத்தம் 33 படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்திய திரைப்படக் கூட்டமைப்பு (IFFI) கடந்த செப்டம்பர் 18-ம் தேதி இந்தப் பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில், மற்ற 32 படங்களையும் பின்னுக்குத் தள்ளி ‘கோந்தல்’ திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரைக்கான படமாகத் தேர்வாகியுள்ளது. இந்தப் பட்டியலில் ‘துரந்தர் 2’, ‘பார்டர் 2’, ‘120 பகதூர்’, ‘பெத்தி’ உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தியக் கலாச்சாரம், கிராமப்புறங்களின் அழகு மற்றும் திரைப்படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைக் கருத்தில் கொண்டு ‘கோந்தல்’ தேர்வு செய்யப்பட்டதாக தேர்வுக் குழுத் தலைவர் பி. சேஷாத்ரி தெரிவித்துள்ளார். தற்போது ‘கோந்தல்’ உள்ளிட்ட உலகம் முழுவதிலுமிருந்து தேர்வான 104 திரைப்படங்கள், 2027 ஆஸ்கர் விருதுகளின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நடைபெறும் பாரம்பரிய ‘கோந்தல்’ திருவிழாவை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சுமன் என்ற பெண், திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும், காதலன் மற்றும் கணவனின் உறவினர் தொடர்புடைய கொலைச் சதியில் சிக்கிக்கொள்வதையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பான உளவியல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

2025-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் ‘கோந்தல்’ திரைப்படம் உலகளவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் தாகர், சிறந்த இயக்குநருக்கான ரஜத் மயூரா விருதையும் வென்றுள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Vetta Saami Official Teaser

Vetta Saami Official Teaser | Arulnithi | Ameer | Ghibran | M. Selvakumar | 7MPS…

22 hours ago

Arikomban Official Trailer

Arikomban Official Trailer | Mithun Maheshwaran | Sagishna Xavier

22 hours ago

ஐட்டம் பாடல்கள், பெண்களின் காட்சிப்படுத்தல்.. மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!

இந்திய சினிமாவில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் படங்களில்…

24 hours ago

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – சோபிதா குறித்து நாக சைதன்யா நெகிழ்ச்சி

நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும்…

24 hours ago

நடிகர் சரத்குமாரின் 177-வது படம் ‘டாக்ஸி’.. டைட்டில் அறிவிப்பு வெளியீடு!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ‘சுப்ரீம் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான சரத்குமாரின் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ (Taxi) என…

24 hours ago

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய…

1 day ago