Shruti Haasan Opens Up About Item Songs and the Portrayal of Women in Cinema
இந்திய சினிமாவில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கதைக்கு அவசியமில்லாத வகையில் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி பாடல்கள் இடம்பெறுவது தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடும் நிலையில், படங்களில் இடம்பெறும் ‘ஐட்டம் பாடல்கள்’ மற்றும் காட்சி ரீதியான பாலியல் வெளிப்பாடு குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
‘பெத்தி’ படத்தில் இடம்பெற்ற சிறப்புப் பாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், “எனக்கு நடனமாடுவது பிடிக்கும். அதேபோல் விதவிதமாக உடை அணிவதும் பிடிக்கும். இதுதான் என்னுடைய அணுகுமுறை. காட்சி ரீதியான பாலியல் வெளிப்பாடு (Visual Sexuality) குறித்த எனது அணுகுமுறை எனக்கு மிகுந்த சுதந்திர உணர்வைத் தருகிறது.
மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நான் எதையும் செய்ததில்லை. ஏதேனும் ஒரு உடை எனக்கு சௌகரியமாக இல்லை என்றால், அதை அணியமாட்டேன் என்று சொல்லிவிடுவேன். எனவே, நான் ஒரு உடையை அணிந்திருக்கிறேன் என்றால், அதில் நான் முழுமையாக வசதியாக உணர்கிறேன் என்று அர்த்தம். இதுதொடர்பாக பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக என்னை விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பெத்தி’ படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தப்பட்ட விதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அவருடைய அனுபவம் குறித்து கருத்து தெரிவிப்பது எனக்குப் பொருத்தமானதாக இருக்காது. என்னால் மற்ற பெண்களுக்காகப் பேச முடியாது; அவர்களாலும் எனக்காகப் பேச முடியாது.
இன்று இந்த விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. உதாரணமாக, இந்தத் திரைப்படம் குறித்து நாம் இப்போது மேற்கொள்ளும் உரையாடல், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமாகியிருக்காது. இந்த உரையாடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க நானும் எனது குழுவினரும் முயற்சிக்கிறோம். அது ஐட்டம் பாடலாக மட்டுமல்ல, ஒரு காட்சியாகவோ அல்லது சண்டைக் காட்சியாகவோ கூட இருக்கலாம். நானும் எனது குழுவினரும் ஒருங்கிணைந்து மிகச் சரியாகச் செயல்படுவதால், இதில் பெரிய சிக்கல்கள் ஏற்படுவதில்லை. இருப்பினும், சில நேரங்களில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. அதனால், நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும்…
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ‘சுப்ரீம் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான சரத்குமாரின் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ (Taxi) என…
நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய…
இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரைக்கான படமாக, இளையராஜா இசையமைத்த மராத்தி திரைப்படமான 'கோந்தல்' (Gondhal) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து…
Hello Kadhal Trailer | Arya | Nikhila Vimal | Vaishnavi Chaitanya | Nikhil Muraly |…
Aathi Ennale Mudiyalaye Lyrical Video | Irandu Vaanam | Vishnu Vishal | Mamitha Baiju |…