Suriya Thanks Dhanush for Postponing Om Release for Scene
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாவும், வில்லனாக நஸ்லெனும் நடித்துள்ளனர். சுசின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே வெளியான இப்படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன.
தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6-ஆம் தேதி ‘சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்படம், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் படங்களின் வெளியீட்டைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘சீன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தனது படத்திற்காக ‘ஓம்’ படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்த தனுஷுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “நடிகர் தனுஷுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். எங்களது படம் தீபாவளிக்கு வெளியாவதால், தனது ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக தனுஷ் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சூர்யா மேடையில் தனுஷுக்கு நன்றி தெரிவித்த இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,…
சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில், பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான…
கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய…
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு…
Scene Official Trailer | Suriya | Nazriya Nazim | Naslen | Sushin Shyam | Jithu…
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின்…