என் வாழ்க்கையில் இந்த நிலைக்கு வரக் காரணம் ஜோதிகாதான் – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகா குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று குறிப்பிட்ட சூர்யா, தனது வாழ்க்கையில் இன்று இந்த நிலையை அடைந்ததற்கும், சரியான பாதையில் பயணிப்பதற்கும் ஜோதிகாவின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்று தெரிவித்தார். தான் பல தவறுகளைச் செய்திருந்தாலும், அனைத்துச் சூழல்களிலும் தனக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தியவர் ஜோதிகா என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், ஜோதிகா சிறந்த தாய், தோழி, வாழ்க்கைத்துணை மட்டுமின்றி மிகவும் வலிமையான பெண் என்றும் பாராட்டினார். சூர்யா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா மகிழ்ச்சியுடன் அவருக்கு முத்தங்களைப் பறக்கவிட்டார். இந்த அழகான தருணம் அரங்கில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து பேசிய சூர்யா, தன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அளவற்ற அன்புதான் இந்த மேடையை மேலும் அழகாக்கியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதனிடையே, தங்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகத் தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க முன்வந்த நடிகர் தனுஷுக்கும் சூர்யா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சீன்’, ரசிகர்களுக்கு முழுமையான திரை அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Suresh

Recent Posts

அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதி நடத்திய பிரம்மாண்ட தீபாவளி விருந்து!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,…

25 minutes ago

ரூ.200 கோடி பணமோசடி வழக்கு… அரசுத் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகும் நடிகை நோரா பதேஹி!

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில், பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான…

42 minutes ago

சீன் படத்திற்காக ஓம் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்த தனுஷ்… மேடையில் நன்றி தெரிவித்த சூர்யா!

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான…

1 hour ago

குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்காதீர்கள்! பெற்றோருக்கு மம்மூட்டி எச்சரிக்கை

கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய…

1 hour ago

Scene Official Trailer

Scene Official Trailer | Suriya | Nazriya Nazim | Naslen | Sushin Shyam | Jithu…

19 hours ago

9 வயதிலேயே 12 மொழிகள் தெரியும்… அசின் மகளின் திறமை!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின்…

2 days ago