sigma movie review
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது. அந்த லாக்கருக்கான சாவியை தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் ஒப்படைக்கிறார் சம்பத்.
மறுபுறம், கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் சந்தீப் கிஷன், சூதாட்டத்தில் இருந்த பணத்தையும் இழந்து தவிக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு லாக்கர் சாவியுடன் கூடிய பென் டிரைவ் ஒன்று கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி சூதாட்ட கிளப் உரிமையாளரிடம் பணம் பறிக்கலாம் என நினைக்கும் சந்தீப் கிஷனுக்கு, அந்த பென் டிரைவ் சாதாரணமானது அல்ல என்பது தெரியவருகிறது.
அதன்பிறகு, பல்வேறு ஆபத்துகள் அவரைத் துரத்தத் தொடங்குகின்றன. அந்த பென் டிரைவில் இருக்கும் ரகசியம் என்ன? அதை கைப்பற்ற நினைப்பவர்களிடமிருந்து சந்தீப் கிஷன் தப்பித்தாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் பரபரப்பான மீதிக்கதை.
சந்தீப் கிஷன், பக்கத்து வீட்டு பையன் போன்ற கலகலப்பான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். ஆனால், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இன்னும் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
கதாநாயகியாக வரும் ஃபரியா அப்துல்லா, கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், இடம்பெறும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அன்புதாசனின் டைமிங் காமெடிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. ராஜூ சுந்தரத்தின் நடிப்பு சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சம்பத் மற்றும் ஷிவ் பண்டிட் ஆகியோர் வில்லத்தனத்தில் இன்னும் மிரட்டியிருக்கலாம்.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், நடிகர்களின் பங்களிப்பும் முக்கிய பலமாக உள்ளன. அதேநேரத்தில், திரைக்கதையில் ஆங்காங்கே தடுமாற்றம் தெரிகிறது. சில காட்சிகளில் லாஜிக் மீறல்களும் தென்படுகின்றன.
இருப்பினும், பரபரப்பு குறையாமல் கதையை நகர்த்தியிருப்பது கவனம் ஈர்க்கிறது. இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய், எதிர்பார்ப்புகளுக்கு பெரிய அளவில் குறை வைக்காத வகையில் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார். முதல் படத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் இன்னும் வலிமையான கதைக்களத்துடன் களமிறங்கலாம்.
தமனின் இசை படத்திற்கு உற்சாகம் சேர்க்கிறது. குறிப்பாக பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் வலு கொடுக்கிறது. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன.
மொத்தத்தில், ஆக்ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு ‘சிக்மா’ ஓரளவு திருப்தி தரும் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…
நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு…