In the World We Live In… Samantha’s Instagram Story
நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது “நாம் வாழும் உலகில்…” எனத் தொடங்கும் ஒரு பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், பாலியல் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படும் நிலையில், அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும், ஒற்றை பெற்றோராக வாழும் பெண்கள் விமர்சிக்கப்படும் நிலையில், பொறுப்பின்றி விலகிச் செல்லும் தந்தைகள் குறித்து சமூகம் பேசுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை விமர்சிப்பவர்கள், அந்தக் குற்றத்தை செய்தவர்கள் குறித்து பேசுவதில்லை என்றும், உண்மையை பேசுபவர்கள் விமர்சிக்கப்படும் நிலையில், உண்மையை மறைப்பவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை என்றும் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்ற கருத்துடன் சமந்தா இந்தப் பதிவை பகிர்ந்துள்ளார்.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…