Fake Obscene Video of Janhvi Kapoor Hyderabad Police Register Case
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘சுட்டமல்லி’ பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அந்தப் பாடலில் இடம்பெற்ற ஜான்வி கபூரின் காட்சிகளை சிலர் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்பிங் செய்து, போலியான ஆபாச வீடியோவாக இணையத்தில் பரப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி மற்றும் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், AI தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஜான்வி கபூரின் போலி வீடியோ தொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…