Sanjay Dutt’s Prime Minister Remark Sparks Controversy Online – Actor Clarifies!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் தனது பிரபலமான ‘முன்னா பாய்’ கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துக் காட்டினார். தமிழில் இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, தன்னை இந்திய பிரதமராக கற்பனை செய்துகொண்டு, ‘முன்னா பாய்’ பாணியில் சஞ்சய் தத் மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள். நாட்டில் அமைதி நிலவ வேண்டும். ஆனால், தற்போது அந்த அமைதியை நம்மால் உணர முடியவில்லை. இந்தியர்கள் பெருந்தன்மையும் விருந்தோம்பல் குணமும் கொண்டவர்கள். நாம் நிறைய கொடுத்திருக்கிறோம். எப்போதும் அப்படியே இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், மகாத்மா காந்தியின் மூன்று குரங்குகளை குறிப்பிட்ட அவர், “தீயவற்றை பார்க்காதே, தீயவற்றை கேட்காதே, தீயவற்றை பேசாதே. ஆனால், இன்றைய சூழலில் நான்காவது குரங்கு ஒன்று இருக்க வேண்டும் என விரும்புகிறேன். யாராவது தவறு செய்தால், அதை யார் சரி செய்வார்?” எனக் கூறினார்.
சஞ்சய் தத்தின் இந்தப் பேச்சு, “இந்தியாவில் இனி அமைதியை உணர முடியாது” என்று அவர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது பேச்சு குறித்து சஞ்சய் தத் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், எந்தவொரு தனிநபர், சமூகம் அல்லது நிறுவனத்தின் உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது கருத்துகள் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நோக்கில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உரையாடலின் ஒரு பகுதியாக கூறப்பட்டவை என்றும், ‘முன்னா பாய்’ திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டியைப் போன்றே அவை அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
‘காந்திகிரி’ மூலம் வலியுறுத்தப்படும் அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணம் ஆகிய கருத்துகளையே தனது பேச்சு பிரதிபலிக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும், ஆனால் தனது வார்த்தைகள் அந்த நோக்கத்திலிருந்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார்.
मैं यह स्पष्ट करना चाहता हूँ कि किसी भी व्यक्ति, समुदाय या संस्था की भावनाओं को ठेस पहुँचाना, उनका अपमान करना या उनका अनादर करना मेरा उद्देश्य कभी नहीं रहा है।
मेरी टिप्पणियाँ एक स्क्रिप्टेड बातचीत के संदर्भ में की गई थीं, जिसका उद्देश्य हल्का-फुल्का और हास्यपूर्ण संवाद करना था। इसके पीछे की भावना मुन्ना भाई जैसी फिल्मों में दिखाई गई हास्य और व्यंग्य की शैली के समान थी, विशेष रूप से ‘गांधीगिरी’ की उस सोच से प्रेरित थी, जिसका उद्देश्य प्रेम, एकजुटता और सद्भावना का संदेश देना था। दुर्भाग्यवश, मेरी बातों को उस मूल संदर्भ से अलग तरीके से समझा गया।
— Sanjay Dutt (@duttsanjay) October 4, 2026
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…