கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். திரைப்படங்களைத் தாண்டி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தொழில் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள்? என தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து தமன்னா கூறுகையில், “நான் குழந்தைக்கு தாயானால் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் என்று என் அம்மா நினைக்கிறார். ஆனால், அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் மிகவும் கூலான அம்மாவாகத்தான் இருப்பேன்.

என் குழந்தைகளுடன் மிகவும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழக விரும்புகிறேன். அவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்துகொள்ளும் தாயாக இருக்க மாட்டேன். ‘இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டாம், சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள்’ என்று சொல்லும் அம்மாவாக இருக்கவே விரும்புகிறேன்.

என் குழந்தைகளுக்கு தாயாக மட்டுமல்லாமல், அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என தெரிவித்துள்ளார்.

தமன்னாவின் இந்தப் பேச்சு, அவரது எதிர்கால குடும்ப வாழ்க்கை குறித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Suresh

Recent Posts

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

57 minutes ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

1 hour ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

1 hour ago

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…

1 hour ago

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

17 hours ago

பத்தா திரை விமர்சனம்

ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…

18 hours ago