Yes, I Am Dark-Skinned – Atlee Hits Back at Trolls Over His Appearance
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆமாம், நான் கருப்புதான். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னுடைய தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில் என்னுடைய படங்கள்தான். இதுதான் என்னுடைய அடையாளம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது திரையுலகப் பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்தும் அட்லீ பேசியுள்ளார். குறிப்பாக, தான் திரையுலகில் போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி தனக்கு பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருந்ததை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
ஒருவருக்கான உண்மையான நட்பும் ஆதரவும் அவரது நிறம் அல்லது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை அட்லீ தனது பேச்சின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
அட்லீயின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தனது கடின உழைப்பாலும் திறமையாலும் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள அட்லீயின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…