யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள் வெளியாகாத நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுத்து, தனது விதியை மாற்றி எழுதும் ஒரு சாமானிய மனிதனின் துணிச்சலான பயணத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.எஸ். ரமணா பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, விவேகா பாடல்களை எழுதியுள்ளார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். குருராஜ் கலை இயக்கத்தையும், ஃபேன்டம் பிரதீப் சண்டைப்பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

யோகி பாபுவுடன் வேலா ராமமூர்த்தி, படவா கோபி, ஜீவா சுந்தரேசன், செண்ட்ராயன், கே.எம். கணேஷ்கர், சபிதா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே, ‘சிங்காரம்’ படத்தைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் ‘காகங்கள்’, ‘அர்ஜுனன் பேர் பத்து’, ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’, ‘கோல்டன் பாக்யம்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும், ஜெய் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கும் பெயரிடப்படாத படம், சைஜு குரூப் நடிக்கும் ‘ஹரிவராசனம்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

25 minutes ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

35 minutes ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

40 minutes ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

46 minutes ago

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

16 hours ago

பத்தா திரை விமர்சனம்

ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…

17 hours ago