Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்’ – விஷால் அறிவிப்பு

Vijay to Inaugurate Nadigar Sangam Building - Vishal

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான விஜய் திறந்து வைக்க உள்ளதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய விஷால், “நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை வேறு யாராவது திறந்து வைப்பார்கள் என்று முதலில் நினைத்தோம். ஆனால் தற்போது தமிழ்நாடு முதலமைச்சராகவும், எங்கள் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருக்கும் விஜய்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதை நான் அவரிடம் முன்பே தெரிவித்திருந்தேன்” என்றார்.

கடந்த 2024ஆம் ஆண்டு, நடிகர் விஜய் தனது சொந்த நிதியிலிருந்து நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார். பல ஆண்டுகளாக நீடித்த சட்டப் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடிகளைத் தொடர்ந்து, தற்போது கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பிறகே தனது திருமணத்தை நடத்துவேன் என்ற உறுதியில் நடிகர் விஷால் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.