Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாடிவாசல் படம் குறித்து வெற்றிமாறன் சொன்ன தகவல்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வாடிவாசல் படம் ட்ராப் ஆகிவிட்டதாக வெளியான தகவலுக்கு வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கங்குவா உட்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சுதா கொங்கராவின் இயக்கத்தில் புறநானூறு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

வாடிவாசல் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிய நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருகிறது. இதனால் அவ்வபோது இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் விடுதலை படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்றே எனக்கு தெரியாது. அது வெளியான பிறகு வாடிவாசல் 2 படம் தொடங்கும். அதன் பிறகு தான் வடசென்னை பார்ட் 2 உருவாகும் என தெரிவித்துள்ளார்.

Vetrimaaran about vaadivasal movie
Vetrimaaran about vaadivasal movie