தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வானத்தை போல. அண்ணன் தங்கையின் பாச கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் துளசியின் கணவராக ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கார்த்திக்.
ஏற்கனவே இவர் மேக்கப் ஆர்டிஸ்ட் காயத்ரி என்பவளை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இருவருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இது குறித்த வீடியோவை கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram

