ஜனநாயகன் படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தானு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக பட குழுவினர் தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் விஜய் நடித்து ஹிட்டான திரைப்படம் தெறி 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். அந்தப் பதிவில் படத்தின் போஸ்டர் உடன் விரைவில் திரையில் என சொல்லியிருக்கிறார்.
இவரின் இந்த பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விரைவில் திரையில்
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #Theri pic.twitter.com/CKCx3M76mR
— Kalaippuli S Thanu (@theVcreations) January 10, 2026

