வெளியாகிறது ‘தி ஒடிஸி’ மேக்கிங் வீடியோ – எந்த ஓடிடியில் தெரியுமா?

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள ‘தி ஒடிஸி’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க மகாகாவியமான ‘ஒடிஸி’யை தழுவி உருவாகியுள்ள இந்தப் படம், நோலனின் முதல் புராணக் கதையை மையமாகக் கொண்ட திரைப்படமாகும்.

‘தி டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘தி பிரெஸ்டீஜ்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களை இயக்கிய நோலன், தனது தனித்துவமான கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அவரது ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுகளில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘தி ஒடிஸி’ திரைப்படம், டிரோஜன் போர் முடிந்த பிறகு, இத்தாக்கா மன்னர் ஒடிஸியஸ் தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்ப மேற்கொள்ளும் ஆபத்தான மற்றும் சாகசம் நிறைந்த பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் மாட் டேமன், டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஆன் ஹாத்வே, எலியட் பேஜ் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் ஒடிஸியஸ் கதாபாத்திரத்தில் மாட் டேமன், அவரது மனைவி பெனிலோப்பாக ஆன் ஹாத்வே, மகனாக டெலிமாக்கஸ் வேடத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘தி ஒடிஸி’ படத்தின் மேக்கிங் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு வீடியோ, இந்தியாவில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Suresh

Recent Posts

O.M Trailer

O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…

1 day ago

ஜான் டோ திரைவிமர்சனம்

கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்…

1 day ago

பிளாக் கோல்டு திரைவிமர்சனம்

தலைமுடி வியாபாரம் செய்து வருபவர் ஏ. வெங்கடேஷ். அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் ரூ.5 கோடி மதிப்புள்ள…

1 day ago

எங்க வீட்டுல என் பேச்சுக்கே இடமில்லை – ஷாருக்கான் கலகல பேச்சு!

இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனித்துவமான…

1 day ago

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் செங்குலம் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு…

1 day ago

ரூ.1,000 கோடி வசூலை கடந்தது ‘ராமாயணா’

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ…

1 day ago